Tuesday, October 15, 2013


உடல் மொழி #
 
மடல் வழி சொல்வதினும் 
உடல் வழி சொல்வதே
உண்மை மொழி !
உடல் மொழி சொல்லும்
உண்மை மொழி!
உலகத்தில் அதுவே
தனி மொழி !.
கண்கள் சொல்வது
உண்மை மட்டுமே,
எள்ளளவும் பொய்யில்லை
உள்ளம் உள்ளுவதை
உள்ளபடி சொல்வதாலே,
கண்கள் சொல்வது
உண்மை மட்டுமே!
 
கைகளும் விரல்களும்
கதைகள் சொல்லாது,
மெய்களை மட்டுமே
மென்மையாய்ச்
சொல்லி இருக்கும்!
 
பாதங்களும் கால்களும் நடைபோடும்
பாதைகளைக்
காட்டி விடுமே
நவின்றிடும் உண்மையை
நாசூக்காக
இருப்பதுவும் இசைவதுவும்
நடப்பதுவும்
நயமாக நவில்வதுவும்
நம்மொழி கூறிடுமே
உடல்மொழி பேசிடுமே!
                   $$$$

No comments: