Wednesday, April 11, 2007

வைரமணி கவிதை-- மென்பொருளே.(பெண்ணினம்.. Software..)









மென்பொருளே மென்பொருளே...


மெய்யான என்பொருளே!(பெண்ணினம்.. Software..)








மென்பொருளே மென்பொருளே...


மெய்யான என்பொருளே!


வன்பொருளாம் எனக்குள்ளே


மென்பொருளாய் வந்தவளே!





வடிவற்ற எனக்குவடிவம் தந்தவளே!


உயிரற்ற எனக்கு உயிரைத் தந்தவளே!


முச்சுக் காற்றாகிமுகவரி தந்தவளே!


"பேச்சு" க் கொடுத்துபெருமை சேர்த்தவளே!





உயிர் நீராய் உடலுக்குள் ஓடி


உயிர் தந்தவளே!


மெய்யான என்பொருளே!


மெய்யாலும் மெய் வளர்த்தவளே!


முக்கியான மென்பொருளே!


என் சகியே


உனக்கென் வணக்கம்>>>>





மடப் பெண்ணே!


நீயின்றி நானொரு"ஜடப்" பொருளே!


நானின்றி நீயொரு"மடப்" பொருளே!

Saturday, March 10, 2007

ஒலிக்காத என் குரல்கள்?....கேட்காத என் குரல்கள்?











ஒலிக்காத என் குரல்கள்?

கேட்காத என் குரல்கள்?

ஈனஸ்வரமாய் ஒலிக்கும்
என் குரல்களைக் கேட்க
ஓரிறு காதுகள் உண்டா?
எனக்குள்ளே ஒலிக்கும்
எண்ணற்ற குரல்களைக்கேட்க
ஏதேனும்காதுகள் உண்டா?


குரல்களுக்கே கதி இதுவென்றால்
அதிலிருக்கும்
வார்த்தைகளுக்குவழியெங்கே?
வடிகாலெங்கே?

நிறப் பிரிகை செய்து
வண்ணம் காணும்
படிகம் போலே
என் குரல் பிரித்து
வண்ணம் காணும்
இரசிகன் உண்டா?
அவனுக்கோர்
ரசனை உண்டா?

Thursday, March 8, 2007

வைரமணி கவிதைகள்

பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்!!

பெண்மையைப் போற்றுவோம்!!
பெண்ணென்று போற்றுவோம்!
பெருமிதம் கொள்வோம்!

அழகுப் பதுமையாய்....

அருமையான சிறுமியாய்....

இளம் பெண்ணாய்....கண்ணென்று கொள்ளும் காதலியாய்,
கவின் மகளாய்.....
பாலூட்டித் தாலாட்டி....
பொதிந்து பூபோலக்காப்பாற்றும் தாயாய்........

அற்புதமாய்,அருமனையாய்..........

சீராட்டும் சிறு மகளாய்....

சிந்தனைத் திலகமாய்...

போராடும் புரட்சிப் பெண்ணாய்....

நிர்வாகத் தலைவியாய்..

வீட்டரிசியாய்......

நாட்டரசியாய்....

வெற்றி கொள்ளும் பெண்ணே!!

உனக்காயிரம் கோடி வணக்கம்......

Wednesday, March 7, 2007

An Introduction

A Nice Experience to enter the world of Blogger. Vairamani