Sunday, December 25, 2011



அன்னை தெரசே!!!!!!!!!!
மாதரசே! மா தெரசே!

அன்பிதயம் கொண்ட தாயே
ஆதலாலே அன்னை யானாய்!
அன்பிதயம் படைத்த தாயே!
ஆதலாலே அன்னை யானாய்!
அன்பிலிதயம் நனத்த தாயே
ஆதலாலே அன்னை யானாய்!
$$$$$$$$$$
மாதபசி! மா(தெ)தரசே!

அன்பால் உலகை அணைத்த தாயே!
உன்பால் வந்தோர் மக்கள் கோடி!
உன்பால் வந்தோர் மட்டும் இன்றி
நட்பால் அனைவரும் காத்தாய் தேடி!
$$$$$$$$$$
மாதரசே! மா தெரசே!
மூதரசி! மாதரசே!
வெண்பால் உடையில் மக்கள் நடுவே
பண்பால் பரிவால் சேவை செய்தாய்!
கண்போல் காத்தாய் நலிந்தோர் தம்மை
தெம்பால் வாழ்ந்தது எங்கள் கூட்டம்!
பெண்பால் சிறக்க வந்த தாயே!
உன்போல் ஒருவரில்(லை) உலகில் தாயே!
$$$$$$$$$$$$$$
"மூளையின் சுருக்கம்"
"அறிவின் ஆழம்"
என்பது விஞ்ஞானம்!
உன்................................
"முகத்தின் சுருக்கமோ"
"உழைப்பின் ஆழம்"
என்பது நம் ஞானம்!
$$$$$$$$$$$$
அன்னை மேரிக்கு
அன்பு மேரிக்கு
வந்த மகன் யேசுதானே!
அற்புதன் யேசுதானே!

அந்த மேரிக்கு
அன்பு மேரிக்கு
வந்த மகள் நீதானே!
அன்னை தெரசு நீதானே!
நெஞ்சமெல்லாம் நீதானே!
நெஞ்சமெல்லாம் தெரசுதானே!!!!!

$$$$$$$$$$$$$







Thursday, December 15, 2011









சிந்தனை உலகை விரிக்கிறதே!!!

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!

விந்தை உலகம் இதுதானே!

வேடிக்கை காட்டுது பார்த்தாயா?

####

சிலந்தி வலையை விரிப்பதுவும்-அதில்

சிறுபுழு பூச்சி விழுவதுவும்

உலக நியதி தானென்று

உணர்ந்து கொள்ளும் போதினிலே

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!!

####

குயவன் சக்கரம் சுழல்வதுவும்- அதில்

குவலயச் சுழற்சி தெரிவதுவும்

துயரச் சக்கரம் சுழல்வதுவும்

தொடரும் இன்பம் தெரிவதுவும்

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!


#####

மலர்த்தேன் வண்டு சேகரிக்க-

மனிதன் உண்ண அபகரிக்கப்

புலப்படும் உண்மை இதுவென்று

புரிந்து கொள்ளும் போதினிலே!

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!


####


மீனவன் வலையை வீசிடவும்-அதில்

மீன்கள் வலிந்து விழுவதுவும்

தினமும் நிகழும் கதையென்று

தெரிந்து கொள்ளும் போதினிலே!!

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!!!

######


பறவை புழுவைத் தின்பதுவும்-அப்

பறவை மனிதனுக் காவதுவும்,

திறமை அல்ல என்றேநாம்

தெரிந்து கொள்ளும் போதினிலே!!

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!!


#######

ஒன்றை ஒன்று கொல்வதுவும்

ஒன்றில் ஒன்று வாழ்வதுவும்

மண்ணில் என்றும் உள்ளதென

மனிதன் உணரும் போதினிலே

சிந்தனை உலகை விரிக்கிறதே!!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!!!

########








திருமகன் இயேசு!திருமகன் இயேசு!



திருமகன் இயேசு!






திருமகன் பிறந்தான் திருவைத் தந்தான்!



அருளைத் தந்தான், அமைதி தந்தான்!



ஆனந்தம் தந்தான், அனைத்தும் தந்தான்!



அனந்தம் இயேசு!! அவனைப் போற்றுவோம்.!!