
விமானம்:-
உலகம் சுற்றும் உலோகப் பறவை!
விண்ணில் பறக்கும் எந்திரப் பறவை!
மூக்கு நீண்ட முத்திரைப் பறவை!
அசைக்கா இறகிலும் அத்தனை சக்தி!
எளிதாய்ப் பறந்திடும்
எத்தனை பேருடன்!
எத்தனை எடையுடன்!
மலை தாண்டும், மடுதாண்டும்!
அலை கடல் ஆயிரம் தாண்டும்!
ஊர் நிலம் நீர் எளிதாய்த் தாண்டும்!
உயரப் பறந்து உலகை அளந்திடும்
உலகம் சுற்றும் உலோகப் பறவை.
இறகுக்குள் பொதிந்து
தன் குஞ்சுகளைக் காப்பபது போல்
உடலுக்குள் எமை வைத்து
வெயில் மழை படாமல் காக்கும்
விண்ணின் பறவையே!
உந்தித் தாவும் கால்களாய்
உன் சக்கரங்கள்!
விண்ணின் பறவையே!
மண்ணின் மைந்தன் கண்ட
விண்ணின் பறவையே!
நீ தான்
விந்தைப் பறவையே!