Monday, June 9, 2008

கண்மணி அறிவாள் விடையை!














கண்மணி அறிவாள் விடையை!

உன் கண் மணி கண்ணின் மணி
மட்டுமே அறிவாள் விடையை
உன் கண்ணின் கருமணி
கவிதைக்குள் சிறக்கும் மணி
அறிவாள் விடையை!
********

கண்மணி சொல்வது
கேட்க கருமணி தேடினேன்!
உதடுகள் சொல்வது
பொய்யென்று எண்ணியே உண்மை தேடிட
உன் கண்களைத் தேடினேன்!
அதன் கருமணி நாடினேன்
!

Sunday, June 8, 2008

பொய் எது??


பொய் எது??
உதடுகள் சொல்வது பொய்யா?
உன் உள்ளம் சொல்வது பொய்யா?
நினைவில் நின்று நித்திரை கெடுப்பதும்,
கனவில் வந்து கற்பனை வளர்ப்பதும்
கண்மணி நீ என்று
காதல் கொண்ட
உன் உதடுகள் சொல்வது பொய்யா?
உன் உள்ளம் சொல்வது பொய்யா?