Wednesday, August 8, 2018

முக நூல்






















முக நூல்: (1)
முகவரி என்றாலும் அதற்கு 
முகமொன்றும் இருப்பதில்லை!
வரிகளும் இருப்பதில்லை!

வரிகளாய் மட்டும் 
வரைவதாலே முகவரிஎன்றானது
மின்னஞ்சல் முகவரிகள் வந்த பின்பு
முகம் காட்ட வழி தேடி வந்ததே 
முகப்புத்தகம் எங்கள் 
முகப் புத்தகம்
முகவரி காட்டும் 
முகநூல்!
முகவரிகளை மட்டுமின்றி 
முகங்களையும் இணைக்கும் 
முதல் நூல் என்பதே
முகநூல்எங்கள் முகநூல்!
முகங்களின்  கோர்வை 
என்பதால் முகப்புத்தகம் 
என்று பேரிட்டனரோ?

முக நூல்: (2)
முகவரிகளும் முகங்களும்
முகப்புத்தகத்தில் சங்கமம்..
முகங்களை முகப் புத்தகத்திலே
முழுவதும் பார்த்துக் கொள்வதால்……………..
நேருக்கு நேர் 
முகம் பார்க்கத் தேவை இருக்காதோ
 இனி வரும் காலத்தில்?????????!! 
முக நூல்: (3).                                                     
நேரில் பார்க்கையில்
நேரும் முக பாவங்கள்
அதுகாட்டும்  தாபங்கள்

ஆயிரம் தாக்கங்கள்
முகப் புத்தகத்தில் காண முடியாதே!
நேரில் பார்ப்பதால் நேரும் உணர்வுகள்
முகப் புத்தகத்தால் நிகழ்த்த முடியாதே?
நிஜம் என்றுமே நிழலிடம் தோற்க முடியாதே?

முக நூல்: (4).                                                
நிஜமே! நிஜமே
நிழல் என்றும்
நிஜமாகாது
நிழல் தரும் சுகமே நிலையன்று
நிஜம் மறந்து நிழலின் பின்னால் நித்தம் ஓடும்!
நித்தில மாந்தருக்கு 
நிழலோடு நிஜத்தையும் உணரும் 
மதிஅருள்வாய் நீல வண்ணக் கண்ணா!!