Tuesday, November 26, 2013

படிகள்#  


 
















ஏறி வந்த படிகளை எண்ணி எண்ணி
எடுத்து வைத்த அடிகளை எண்ணி எண்ணி
தேடி வைத்த செல்வத்தை எண்ணி எண்ணி
கூடி வந்த சொந்தத்தை
எண்ணி எண்ணி
மூடி வைத்த எண்ணத்தை
எண்ணி எண்ணி
முடியாத கனவுகளை
எண்ணி எண்ணி
விடியாத இரவுகளை எண்ணி எண்ணி
புரியாத உலகத்தை
எண்ணி என்ணி
குடிக்கக் கையில்
கோப்பை கொண்டு
படிமேல் அமர்ந்து
பானம் பருகையில்
பரவசம் பெருகிட
...                                                                                                                         ......                                                                                                                                                                                                                                            ......
......                                                                                                                 ...........
..........                                                                                                           .............
..............                                                                                                   ................
...................                                                                                       .......................

பரவசம் பெருகிட ......
ஏறி வந்த படிகளை எண்ணி எண்ணி......


                                                                    @#####@




Tuesday, October 15, 2013


உடல் மொழி #
 
மடல் வழி சொல்வதினும் 
உடல் வழி சொல்வதே
உண்மை மொழி !
உடல் மொழி சொல்லும்
உண்மை மொழி!
உலகத்தில் அதுவே
தனி மொழி !.
கண்கள் சொல்வது
உண்மை மட்டுமே,
எள்ளளவும் பொய்யில்லை
உள்ளம் உள்ளுவதை
உள்ளபடி சொல்வதாலே,
கண்கள் சொல்வது
உண்மை மட்டுமே!
 
கைகளும் விரல்களும்
கதைகள் சொல்லாது,
மெய்களை மட்டுமே
மென்மையாய்ச்
சொல்லி இருக்கும்!
 
பாதங்களும் கால்களும் நடைபோடும்
பாதைகளைக்
காட்டி விடுமே
நவின்றிடும் உண்மையை
நாசூக்காக
இருப்பதுவும் இசைவதுவும்
நடப்பதுவும்
நயமாக நவில்வதுவும்
நம்மொழி கூறிடுமே
உடல்மொழி பேசிடுமே!
                   $$$$

துரைராஜ்- மீனாட்சி

17-09-2013

துரைராஜ்! மீனாட்சி !
 
அருவியூர் தொட்டு
அம்மன்குறிச்சி கண்ட
அருமைமிகு அன்பரே
தருமமிகு நண்பரே
துரைராஜரே!

அறுபது ஆண்டு கண்ட
அருமைமிகு நண்பரே
மணிவிழாக் காணும்
மணியான நண்பரே!
துரைராஜரே!                                                               
என்றும் கலகலப்பு
எப்போதும் கிண்கிணிப்பு                                            
பொன்னாச்சி மீனாட்சி                       
எனையாட்சி செய்யட்டும்                                           
மனையாட்சி செய்யட்டும்!
.........
                                                                                
எம் வாழ்வு சிறப்பூட்டி
எனையாளு மீனாட்சி
என்று திருப்பூட்டி
அம்மன்குறிச்சி அழைத்து
வந்து அன்பாக
இல்லறம் தொடங்கி
அருமையாக அழகாக
அரவிந்தன் ,ஆனந்தன்
இருவர் பெற்று
அவர்தம் கல்வி
அனைத்தும் தந்து
அவர்க்கும் முறையாக இல்லத்தரசியராய்
நல்வாழ்வு வாழ
பத்மா கண்மணி
தேடித்தந்து பேரன்புப்
பேத்தியாய்
பிரகதியின்
அன்பும் பெற்றோரே !

பத்துப் பத்தாக
பல நூறாண்டு
கண்டு வாழ
ஆண்டு வாழ
அன்போடு வாழ்த்துக்கள் .