Saturday, March 10, 2007

ஒலிக்காத என் குரல்கள்?....கேட்காத என் குரல்கள்?











ஒலிக்காத என் குரல்கள்?

கேட்காத என் குரல்கள்?

ஈனஸ்வரமாய் ஒலிக்கும்
என் குரல்களைக் கேட்க
ஓரிறு காதுகள் உண்டா?
எனக்குள்ளே ஒலிக்கும்
எண்ணற்ற குரல்களைக்கேட்க
ஏதேனும்காதுகள் உண்டா?


குரல்களுக்கே கதி இதுவென்றால்
அதிலிருக்கும்
வார்த்தைகளுக்குவழியெங்கே?
வடிகாலெங்கே?

நிறப் பிரிகை செய்து
வண்ணம் காணும்
படிகம் போலே
என் குரல் பிரித்து
வண்ணம் காணும்
இரசிகன் உண்டா?
அவனுக்கோர்
ரசனை உண்டா?

No comments: